| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Saturday, 10 December 2011
அருள்மிகு வனதுர்கா பரமேஸ்வரி திருக்கோயில்
Wednesday, 12 October 2011
திருப்பருப்பதம் - (ஸ்ரீசைலம்)
தல வரலாறு
- வட நாட்டுப் பாடல் பெற்றத் தலங்களில் இது முதலாவது தலமாகும்.
- மக்கள் வழக்கில் தற்போது "ஸ்ரீசைலம்" என்று வழங்குகிறது.
- சந்திரவதி என்னும் பெண் அடியவர், மல்லிகை மலர்களைக் கொண்டு இப்பெருமானை அர்ச்சித்து வழிபட்டதால் இத்தலத்து இறைவன் மல்லிகார்ச்சுனர் என்று பெயர் பெற்றார்.
- சிலாத முனிவர் தவஞ்செய்த தலமாதலின் இஃது ஸ்ரீசைலம் எனப்படுகிறது.
- நந்தியம்பெருமான் இத்தலத்தில் தவஞ்செய்து இறைவனைச் சுமக்கும் ஆற்றலைப் பெற்றார் என்றும்; நந்தியே இங்கு மலையாக இருந்து பெருமானைத் தாங்குகிறார் என்றும் தலபுராணம் கூறுகிறது.
சிறப்புக்கள்
- பன்னிரண்டு "ஜோதிர்லிங்கங்களுள்" இத்தலமும் ஒன்று. பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களாவன 1. "சோமநாதம்" - குஜராத்திலும், 2. வைத்தியநாதம், 3. பீமசங்கரம், 4. நாகேசம், 5. த்ரயம்பகம், 6. குஸ்மேசம் முறையே - மகாராஷ்டிரத்திலும், 7. ஸ்ரீசைலம் - ஆந்திராவிலும், 8. ஓங்காரம், 9. உஜ்ஜையினி முறையே - மத்தியப் பிரதேசத்திலும், 10, விச்வேசம் (வாரணாசி), 11. கேதாரம் முறையே - உத்திரப் பிரதேசத்திலும், 12. இராமேசுவரம் - தமிழ்நாட்டிலும் உள்ளன.
- சக்தி பீடத்தில் இத்தலம் பிரமராம்பாள் பீடமாகப் போற்றப்படுகிறது.
- சம்பந்தரும், சுந்தரரும் திருக்காளத்தியை வணங்கிய பின்னர், அங்கிருந்தே வடக்கு நோக்கித்தொழுது பாடிப் பரவினர். அப்பர் பெருமான் தம்முடைய கயிலையாத்திரையில் இத்தலத்திற்கு எழுந்தருளி வழிபட்டுப் பாடியுள்ளார்.
- சம்பந்தர், அப்பர் திருப்பதிகங்களில் இத்தலம் "திருப்பருப்பதம்" என்றும், சுந்தரர் திருப்பதிகத்தில் "சீபர்ப்பதம்" என்றும் குறிக்கப்படுகிறது.
- தேவார திருமுறைப் பதிகங்களைப் பெற்றுள்ள மூன்று ஜோதிர்லிங்கத் தலங்களுள் இத்தலமும் ஒன்று. ஏனைய இரண்டும் இராமேசுவரம் மற்றும் திருக்கேதாரம் ஆகும்.
- இத்தலம் அர்ஜுனத் தலமாகும். மருதமரத்தைத் தலமரமாகக் கொண்டுள்ள தலங்கள் மூன்று; அவை அர்ஜுனத் தலங்கள் எனப்படுகிறது. இத்தலம் அவற்றுள் மல்லிகார்ஜுனம் எனப்படும். ஏனையவை (1) திருவிடைமருதூர் - மத்தியார்ஜுனம், (2) திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்திற்கு அருகில் உள்ள திருப்புடைமருதூர் - புடார்ச்சுனம் என்பனவாகும்.
- மேதி, ரவி, ஜுவி என்னும் மூன்று மரங்களின் சேர்க்கையே (மற்றொரு தலமரமான) திரிபலா மரம் என்பர். தத்தாத்ரேயர் இம்மரத்தினடியில் தவஞ்செய்ததால் இஃது தத்தாத்ரேய விருக்ஷம் என்றும் சொல்லப்படுகிறது. இம்மரம் விருத்த மல்லிகார்ஜுனர் கோயிலில் உள்ளது. [இங்கு கரவீரம் என்னும் பழமையான மரமும் உள்ளது.]
- கோயில் அமைந்துள்ள இம்மலையடிவாரத்தில் கிருஷ்ணா நதி ஓடுகிறது; இந்நதியைப் பாதாள கங்கை என்று கூறுகின்றனர்.
- இத்தலத்திற்கு அருகில் நந்திமலை, நந்தியால் உள்ளன. இம்மலைப்பகுதியை "பூகயிலாயம்" என்று புகழ்வர் வீரசைவர்கள்.
- இம்மலையில் எட்டு சிகரங்களும், ஒன்பது நந்திகளும் உள்ளன. அவை முறையே, சிகரங்களாவன - 1. வைடூரிய சிகரம், 2. பரவாளி சிகரம், 3. ரெளப்ய சிகரம், 4. மாணிக்கச் சிகரம், 5. மரகத சிகரம், 6. பிரம்ம சிகரம், 7. க்ஷேமா சிகரம், 8. வஜ்ர சிகரங்கள் ஆகும்; நந்திகளாவன - 1. பிரதம நந்தி, 2. நாக நந்தி, 3. விநாயக நந்தி, 4. கருட நந்தி, 5. சிவ நந்தி, 6. மகா நந்தி, 7. சூரிய நந்தி, 8. விஷ்ணு நந்தி, 9. சோம நந்தி என்பனவாகும். அவ்வாறே இங்கு 1. பிரமேஸ்வரம், 2. ஜனார்த்தனேஸ்வரம், 3. வருணேஸ்வரம், 4. ஹேமேஸ்வரம், 5. சப்தகோடீஸ்வரம், 6. மோக்ஷேஸ்வரம், 7. இந்திரேஸ்வரம், 8. அக்னேஸ்வரம், 9. குக்குடேஸ்வரம் என்று ஒன்பது கோயில்களும் உள்ளன.
- இக்கோயிலில் பாண்டவர்கள் கட்டியதாக சொல்லப்படும் ஆறு ஆலயங்கள் மேற்குப் பிரகாரத்தில் உள்ளன.
- இங்கு சஹஸ்ரலிங்கேசுவரர் கோயில், அன்னபூரணி கோயில், பஞ்சநதீஸ்வரர் கோயில், பளிங்குக் கல்லாலான சண்முகர் ஆலயம் ஆகியன தரிசிக்கத்தக்கன.
- ஜோதிர்லிங்கத் தலமான இத்தலத்தில் சிவராத்திரி வழிபாடு மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
- இங்குள்ள கல்வெட்டுக்களால், அன்னதானத்திற்குக் கட்டளைகள் அமைத்தது, கோயிலில் திருப்பணிகள் செய்தது, தீர்த்தக்குளம் வெட்டியது, கோயில் பணியாளர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தது முதலான பல செய்திகளை அறிய முடிகிறது.
- இங்குள்ள கல்வெட்டுக்கள் அனைத்தும் விஜயநகர மன்னர்கள், சாளுவகாகதீய மன்னர்கள் காலத்தியவை என்று சொல்லப்படுகிறது.
அமைவிடம்
காஞ்சிபுரம்-காமாட்சி அம்மன்

தலத்தின் பெயர் : காஞ்சிபுரம்.
சக்தியின் திருநாமம். : காமாட்சி அம்மன்.
இடம் : சென்னையிலிருந்து சுமார் 75 கீ.மீ. கயல்கண்ணி காமாட்சி வீற்றிருக்கும் திருக்கோயில் தலையாய சக்தி பீடங்களில்
ஒன்று இத்திருக்கோயில் வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகவும் பெருமை கொண்டது
என்பது கூடுதல் சிறப்பு.
பின்னணியில் பிரமிக்க வைக்கும் வரலாறுகள் பல.
பிரம்மதேவன் தன்னுடைய வம்சத்தில் பிறந்து இறந்துபட்ட அசுரர்களை மீண்டும்
உயிர்ப்பித்து வரங்களை அள்ளிதர ஆசை கொண்டான்.அருந்தவம்
இயற்றி அளப்பரிய சக்தியை அடையும் நோக்கில் காஞ்சியை
வந்தடைந்தான்.
நான்முகன்னின் தவத்துக்கு காவல் இருக்க மதுகைடபர் எனும் இரு அரக்கர்
களைத் தோற்றுவித்தான்.நாராயணன். கொடிய அரக்கர் குலம் மீண்டும் உயிர்
பெற்று விட்டால் அண்டத்துகே அபாயம் என்று கவலை கொண்டாள் பராசக்தி.
தனது மாயையினால் மஹாவிஷ்ணு வடிவமேற்றாள்.மதுகைடபர் அவளைத்
திருமால் என எண்ணிப் பணிந்தனர்.அன்னை தன் கையில் இருந்த
சக்ராயுதத்தை ஏவினாள்.அது மதுகைடபரின் சிரங்களை அறுத்தது.
பிரம்மதேவனின் தவம் கலைந்தது.அவன் கோபம் கண்டு,மஹாவிஷ்ணுவின்
தோற்றத்தில் இருந்த பராசக்தி பயந்து ஓடுவதைப் போல் தென்திசையில்
ஓடினாள்.பிரம்மதேவன் அந்த விஷ்ணுவை நெருங்கி,தன் பிரம்மா
ஸ்திரத்தை பிரயோகிக்க முயன்றான்.விஷ்ணுமூர்த்தியாக இருந்த
தேவி,''பிரம்ம தேவனே, உன் காவாளிகளின் உயிர்களைக் கொய்தவர்
உருத்திர மூர்த்தியே! உன் பின்புறத்தில்தான் ஓடுகிறார்'' என்று
இரு கரங்களையும் எதிரில் நீட்டிக் கூவினாள்.
பிரம்மன் திரும்பிய சிறுபொழுதுக்குள், பராசக்தி உருத்திரமூர்த்தியின்
வடிவம் தாங்கி வடக்குத் திசையில் ஓடினாள். பிரம்மன் ஓடோடிச்
சென்று உருத்திர மூர்த்தியின் நெருங்கினான். உருத்திர மூர்த்தி
வடிவம்,பிரம்மனின் தவம் கலைந்தற்குத் தானும் காரணம்ல்ல என்று
பகர்ந்தது. பிரம்மன் குழம்பினான்.
உருத்திர மூர்த்தியாகிய பராசக்தி அவன் பார்வையில் இருந்து மறைந்தாள்.
பிரம்மன் மேலும் திகைத்து விஷ்ணுமூர்த்தி இருந்த திசை பக்கம் திரும்ப,
அன்னை அந்த வடிவையும் மறைந்து போகச் செய்தாள். அந்த நாள் முதல்
வடக்கு திசையில் காட்சி தந்த சிவ வடிவானது ஆம்பர விருசா(மாமரம்) ரூபமாய்
மாறி ஏகாம்பரம் ஆனது. அங்கே ஏகாம்பரநாதனுக்கு ஒரு கோயில் எழுந்தது.
தென் திசையில் காட்சி தந்த திருமால் வடிவு வரதராஜ மூர்த்தியாகக் கோயில்
கொண்டது.
இந்த இரண்டுருவாகக் காட்சி தந்த பராசக்தியோ இருவருக்கும் இடையில்
காமாட்சி தேவி என்ற திருநாமத்துடன் பிரகாசிக்கத் தொடங்கினாள்.
இன்னொரு புறம்.
பந்தகாசுரன் என்ற அரக்கன் பத்தாயிரம் யானை பலம் கொண்டிருந்தான்.'ஐந்து வயதுப்
பெண் குழந்தையால் மட்டுமே என் உயிர் போக வேண்டும்'' என்று ஈசனிடம் வித்தியாச
வரத்தையும் பெற்றிருந்தான்.
அவனால் அச்சுறுத்தப்பட்டு துன்புறுத்தபட்ட முனிவர்கள், தேவர்கள் மீது,
ஈஸ்வரன் கருணை கொண்டான். சில உத்தரவுகள் இட்டான்.ஆண்டவன்
பணித்தபடி தேவர்கள் கயிலை அருகிலிருந்த கோமுகத்தில் ஒரு சுரங்கப்
பாதையில் ஒளிந்தனர்.அந்தப் பாதை காஞ்சியில் வந்து முடிவடைந்தது.
அந்த இடத்தில், ஒரு மண்டபம்.அதன் பீடத்தில் அமர்ந்திருந்தாள்,ஓர் அன்னை.
அவர்கள் பார்வை பட்டதும்,மறைந்தாள்.உருவம் அருவம் ஆன போதிலும் கூட,
கண்ணில் கண்ட உருவத்தை தேவர்கள் நெஞ்சில் இருத்தி வணங்கினர்.
பந்தகாசுரன் மாயமான தேவர்களையும் முனிவர்களையும் தேடித்தேடிக் களைத்தாள்.
உரிய நேரத்தில், அன்னை ஐந்து வயது பாலகியாக உருவெடுத்தாள்.பந்தகாசுரனின்
கழுத்தில் ஒரு காலையும், மார்பில் ஒரு பாதத்தையும் பதித்தாள்.பந்தகாரன்
பார்க்கையில்,
அப்பெண் குழந்தை, பதினெட்டு கரங்களும் அவற்றில் பயங்கர ஆயுதங்களையும்
கொண்ட பைரவியாய் மாறினாள்.
பந்தகாரனை வதம் செய்தாள்
தேவர் முதலானோரிடம் அந்த ஐந்து வயதுப் பாலகி உத்தரவிட்டாள்.
Subscribe to:
Posts (Atom)